• Apr 26 2025

அருண் விஜயை பார்த்துத் தான் ஜிம் ட்ரெயினிங் தொடங்கினேன்...- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக விளங்கும் அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன், இருவரும் தங்கள் கடின உழைப்பால் தற்பொழுது உடல் கட்டமைப்பை மேற்கொண்டு பெயர் பெற்றவர்கள். சமீபத்தில், சிவகார்த்திகேயன், அருண் விஜயின் கடினமான உடற்பயிற்சியை பாராட்டியுள்ளார். மேலும், அவருடைய ட்ரெயினிங் வீடியோக்களைக் கண்ட பிறகு தான், சிவகார்த்திகேயன் ஜிம்மில் பயிற்சி செய்ய தொடங்கினேன் எனத் தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசும் போது, சிவகார்த்திகேயன்,"அருண் விஜய் எப்போதுமே அதிகளவு முயற்சி செய்வார். அவருடைய அர்ப்பணிப்பு அசாத்தியமானது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் அவரைப் பார்த்து தான் நான் ஜிம்மில் பயிற்சி செய்ய தொடங்கினேன்," என்றும் கூறினார்.


சினிமாவில் நடிகர்கள் தங்கள் உடல் அமைப்பை மேம்படுத்த மிகவும் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், அருண் விஜய் தனது படங்களுக்காக, குறிப்பாக ஆக்‌ஷன் கதாபாத்திரங்களுக்காக உடலை தயார் செய்கின்றார்.

"எனக்கும் அவருக்கும் ஒரே ஜிம் பயிற்சியாளர் தான் இருந்தார். ஆனால், அவர் எப்படி கடுமையான பயிற்சி செய்கிறார் என்று பார்த்தபிறகு தான், நானும் ஆரம்பித்தேன் என்றார் சிவகார்த்திகேயன். ஆனால், அவரைப் போல் பயிற்சி செய்வது எனக்கு மிகவும் கடினம்," எனவும் கூறினார்.




Advertisement

Advertisement