• Apr 27 2025

ஒருவருக்கு சங்கீதத்தை விட இங்கிதம் தான் முக்கியம் – தேவாவின் உருக்கமான உரை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இசைஞானி தேவா, சமீபத்தில் தனது வாழ்க்கைப் பயணத்தையும், பிள்ளையின் நடத்தை பற்றிய ஒரு உணர்ச்சிவசப்பட்ட கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் அதில் கூறுகையில் "ஒரு அப்பாவாக, என் மகன் ஸ்ரீகாந்த் தேவாவை நிலைநிறுத்த ரொம்ப வேலை செய்திருக்கேன். ஆனால், அந்த பயணம் சுலபமானதல்ல," என்று தேவா தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

தனது பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பதில் தேவாவின் கோட்பாடுகளும் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. "இசையை மட்டும் கற்றுக்கொள்வது போதாது. நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும். இசை, சினிமா எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆனால், மனித நெகிழ்வு இல்லாத வாழ்க்கை எந்தக் காரியத்திற்கும் உதவாது," என்று தேவா தனது கருத்தை தெளிவாகக் கூறினார்.


அவர் மேலும், "வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றால், பணம் மட்டும் போதாது. பண்பும் முக்கியம்!" என்று தெரிவித்தார். தேவா தனது மகன் ஸ்ரீகாந்த் தேவாவை உதாரணமாகக் கொண்டு இதனைப் பகிர்ந்தார். அவர் அதில் கூறும் போது ஸ்ரீகாந்திற்கு ஒரு போதும் பண்பு குறையவில்லை எனக் கூறினார். 

அத்துடன் "வாழ்வில் நல்ல பெயர் சம்பாதிக்க பல வருடங்கள் ஆகலாம். ஆனால், அதனைக் கெடுக்க ஒரு நொடி போதுமானது. அதனால் தான், நாம் எப்போதும் சரியாக இருக்க வேண்டும்," என்று தேவா அறிவுரை கூறினார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement