• Oct 06 2025

மாமிச உணவை தவிர்த்து.. காலணி அணியாமல் நடித்தேன்.! ரிஷப் ஷெட்டி பகீர்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகர், இயக்குநர், மற்றும் எழுத்தாளர் ரிஷப் ஷெட்டி, தன்னுடைய ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் திரைப்பட பண்பாட்டை மதிப்பதன் அவசியம் குறித்து சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். அவரது புதிய திரைப்படமான ‘காந்தாரா சாப்டர் – 1’ உருவாகும் போதே நடந்த சில நிகழ்வுகள் குறித்து, அவரது வாழ்கையின் நம்பிக்கைகள் மற்றும் நடத்தை எப்படி அதனுடன் பின்னிப் பிணைந்திருந்தன என்பதை நம்மிடம் விவரித்துள்ளார்.


"‘காந்தாரா சாப்டர்-1’ படத்தில் தெய்வீக காட்சிகளைப் படமாக்கும் போது, நான் மாமிச உணவைத் துறந்தேன். அதுமட்டுமல்லாமல், அந்த நாட்களில் காலணியும் அணியவில்லை," என கூறிய ரிஷப் ஷெட்டி, தமது ஆன்மீக அனுபவங்களை மிக எளிமையாக பகிர்ந்தார்.

அவருடைய இந்த அணுகுமுறை, அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமல்ல, நம் பாரம்பரிய மதங்களில் உள்ள ஆன்மீக ஒழுக்கத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே இது காணப்படுகிறது. 

Advertisement

Advertisement