• Sep 10 2025

கோட் படத்தின் OTT ரன் டைம் இத்தனை மணி நேரமா? அர்ச்சனா கல்பாத்தி சொன்ன தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றாக கோட் காணப்படுகின்றது. இளைய தளபதி விஜய் நடித்த கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். கடந்த ஐந்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியில் சாதனை படைத்து வருகிறது.

அதன்படி கோட் திரைப்படம் வெளியான முதல் நாளே 126 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை கோட்படம் நிறைவேற்றுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோட் திரைப்படத்தில் இளைய தளபதி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளதோடு இதில் மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடலில் ஊடாக உயிரிழந்த பவதாரணியின் குரல் ஆகியவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ள.


இதில் முன்னணி நடிகர்களான சினேகா, லைலா, பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜோகி பாபு உட்பட பலர் படத்தில் நடித்திருந்தார்கள். இதன் காரணத்தினாலே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. எனினும் இந்த படத்தின் நீளம் குறையாக காணப்பட்டது.

இந்நிலையில், கோட் படத்தின் ஓடிடி ரன் டைம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் ஓடிடியில் 3 மணி 40 நிமிடங்கள் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா இதை தெரிவித்து உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும்போது 27 நிமிடங்களில் படம் எக்ஸ்ட்ராவாக ஓடிடியில் வெளியாக  உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement