• Apr 17 2026

வசூலில் ஜெட் வேகத்தில் பறக்கும் அவதார்-3.. வெளியான முழுவிபரம் இதோ.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

உலக சினிமாவின் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் அவதார் படத்தின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஆஷ் அண்ட் ஃபயர்’ (Avatar: Ash and Fire), கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், இந்தியாவிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மூன்றாவது நாளில் செய்த வசூல் விவரம் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

திரைப்பட வசூல் தொடர்பான தகவல்களை வெளியிடும் Sacnilk இணையதளத்தின் கணக்குப்படி, ‘அவதார்: ஆஷ் அண்ட் ஃபயர்’ திரைப்படம் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.66.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


முதல் நாள் வசூலிலிருந்தே படம் நல்ல தொடக்கத்தை பெற்ற நிலையில், வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு ஹவுஸ்ஃபுல் காட்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ முதல் பாகம், உலக சினிமாவில் புதிய மைல்கல்லை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, அவதார் திரைப்படத்தை மொத்தம் ஐந்து பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.

அவதார் தொடரின் இரண்டாவது பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு பிரம்மாண்ட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி, ரசிகர்களிடையே சொல்லிக் கொள்ளும் படியான வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் முடிவில், மூன்றாவது பாகம் குறித்து ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது வெளியாகியுள்ள ‘அவதார்: ஆஷ் அண்ட் ஃபயர்’, முந்தைய பாகங்களிலிருந்து சற்று மாறுபட்ட களத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement