• Apr 17 2026

எடுடா வண்டிய...!! சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாட புறப்பட்ட விஜய்..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வந்த இளைய தளபதி விஜய்,  தற்போது  அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  தேர்தலில் போட்டியிடுவதற்காக  பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். 

இன்னொரு பக்கம் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.  இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை  தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்த நிலையில்  தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாமல்லாபுரத்தில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்மஸ் விழாவிற்காக  வீட்டில் இருந்து  காரில் விஜய் சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


குறித்த கிறிஸ்மஸ் விழா  இன்று காலை 10:30 மணி அளவில் ஆரம்பமாகியுள்ளதோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு ‘க்யூஆா்’ கோட் வழங்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement