• Apr 27 2026

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் வந்தாச்சு.!

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம், திரையரங்குகளில் கடந்த மார்ச் 26 ம்  அன்று வெளியானது. காதல் – குடும்பக் கதையம்சம் கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

மரியா ராஜா எலன்சேஷியன் இயக்கியும் எழுதியும் இருக்கும் இந்த படம், காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் நகைச்சுவை கலந்த எளிய கதையால் கவனம் பெற்றுள்ளது. 

இந்த படம் ஆனந்த் ராஜ் என்கிற ‘ஹாப்பி’ என்ற இளைஞரை மையமாகக் கொண்டது. எளிமையான வாழ்க்கை வாழும் அவர், தனது சற்று கவனக்குறைவான தந்தை காத்துமுத்துவின் செயல்களால் அடிக்கடி சிக்கல்களில் சிக்குகிறார். 


இதனால் அவமானங்களையும் மறுப்புகளையும் சந்திக்கும் ஹாப்பி, ஒரு பெண்ணுடன் காதலில் விழுகிறார். ஆனால் இந்த காதல், இரு குடும்பங்களின் சமூக வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது.

படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹாப்பியாக நடித்துள்ள நிலையில், ஸ்ரீ கவுரி பிரியா காவியாவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அப்பாஸ், ஜார்ஜ் மரியன், மதுரை முத்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஹாப்பி ராஜ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 24ம் திகதி வெளியாகி உள்ளது. எனவே திரையில் படத்தை காணத் தவறியவர்கள் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம். 

Advertisement

Advertisement