• Apr 17 2026

பெயரை மாற்ற காரணம் இதுதான்.! உண்மையை வெளிப்படுத்திய கௌதம் கார்த்திக்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான கௌதம் ராம் கார்த்திக் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். சமீபத்தில் அவர் தனது பெயரை மாற்றிய சம்பவம், ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் பேசு பொருளாக காணப்பட்டது.


நடிகர் கௌதம் கார்த்திக் ஆரம்பத்தில் சினிமா உலகில் நுழைந்த போது, தனது பெயரைச் சுருக்கி “கௌதம் கார்த்திக்” என வெளிப்படுத்தினார். இது திரையுலகில் நினைவில் கொள்ளக்கூடிய விதமாக காணப்பட்டது. இதனால், திரையுலகில் அவரை அறிந்தவர்கள் அனைவரும் அவரை இந்த பெயரிலேயே நினைவில் வைத்தனர்.

ஆனால் சமீபத்தில் அவர் தனது பெயரை மாற்றியிருந்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கதைத்த கௌதம், " எனக்கு அம்மா வைத்த பெயர் கௌதம் ராம் கார்த்திக். சினிமாவுக்கு வந்த பிறகு அதைச் சுருக்கி கௌதம் கார்த்திக் என வைத்தேன். 


சமீபத்தில், தாத்தாவின் சொந்த ஊருக்கு சென்ற போது அவரைப் பற்றி மக்கள் கூறிய நினைவுகள் என்னை நெகிழ வைத்தது. நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் என் தாத்தாவும் அப்பாவும் தான். அதனால் தாத்தாவின் பெயரான ராம்-ஐ மீண்டும் என் பெயரில் சேர்த்துக் கொண்டேன். " எனக் கூறியிருந்தார். 

இந்த பெயர் மாற்றம் வெறும் சொற்பொருளில் இல்லாமல், அவரது குடும்பத்தின் மதிப்பையும், மரபையும் கௌதம் ராம் கார்த்திக் மதிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. தாத்தாவின் பெயரை மீண்டும் சேர்ப்பது அவர் குடும்பத்தின் மீது வைத்துள்ள பாசத்தையே வெளிப்படுத்துகிறது. 

Advertisement

Advertisement