தமிழ் சினிமாவில் புது தலைமுறையின் முன்னணி முகமாக மின்னிக்கொண்டதுடன், அதிகளவான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருப்பவர் நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். காதல் கதைகள் மூலம் வசீகரமாக மாறிய இவர், தற்போது தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் புதிய திரைப்படமான ‘Dude’ படக்குழு, பிரதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது முகத்துடன் கூடிய ஸ்டைலிஷ் போஸ்டரை இன்று (ஜூலை 25, 2025) வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் தனது 32வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இயக்குநராக ‘கோமாளி’, நடிகராகவும் இயக்குநராகவும் ‘லவ் டுடே’ மூலமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், தற்போது ‘லவ் இன்சுரன்ஸ் கம்பனி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அவரது பிறந்த நாளையொட்டி, திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பல படக்குழுக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் ‘Dude’ படக்குழுவின் பங்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. பிரதீப் ரங்கநாதனை கொண்டாடும் வகையில், ‘Dude’ படக்குழு வெளியிட்ட போஸ்டர் மிகவும் ஸ்டைலிஷாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.
Listen News!