• Jun 19 2025

40வது பிறந்த நாள் அன்று வெளியான காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு!ரசிகர்கள் ஆச்சரியத்தில்.!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின்  முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை காஜல் அகர்வால் .இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது . மேலும் ரசிகர்கள்  மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


முதன் முதலில் திரைத்துறைக்கு ஹிந்தியில் வெளியான "தில் ஹோ கயானா"  திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர்  தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான "பழனி" திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார் .மேலும் இவர் தெலுங்கில் லட்சுமி கல்யாணம், சந்தமாமா ஆகிய படங்களில் நடித்த இவருக்கு  ராம் சரனுடன் நடித்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

மேலும் இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கிய இவருக்கு  தற்போது திருமணமாகி  செட்டில் ஆகிவிட்டார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிச்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தற்போது  இவர்களுக்கு நீல் கிச்சிலு என்ற மகன் உள்ளார்.


மேலும் இவர்  இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் வரும் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  தற்போது இவருடைய  சொத்து மதிப்பு பற்றிய  விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுமார் ரூ. 80 கோடி சொத்து மதிப்பு இருக்கும் என  கூறப்படுகிறது.  மேலும்இறுதியாக  இவர் நடித்த "சிக்கந்தர்" திரைப்படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .  இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் கருதத்துக்கள்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement