• Sep 21 2025

ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.. தற்போதைய நிலையால் சோகத்தில் ரசிகர்கள்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களிடம் வித்தியாசமான நடிப்பு மற்றும் நையாண்டி கதாபாத்திரங்களால் பிரபலமானவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் பல டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும், பின்னர் திரைப்படங்களிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.


ஆனால் சமீப காலமாக அவர் உடல்நலக் குறைவால் சற்று ஒதுங்கி உள்ளார். அவரை பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி, ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தின.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய புகைப்படங்களில், ரோபோ சங்கர் மிகவும் மெலிந்து, சோர்வுடன் காணப்பட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள், "ஏதாவது பெரிய உடல்நல பிரச்சனை இருக்கிறதா?" என குழப்பமடைந்தனர்.


தற்போதைய தகவலின்படி, ரோபோ சங்கர் நேற்று திடீரென உடல்நிலை மோசமடைந்து துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது வெளியான மருத்துவமனை வட்டார தகவல்களின் அடிப்படையில், ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்திருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement