தமிழ் சினிமா வரலாற்றில், அரசியல், சமூக விமர்சனங்கள், மற்றும் சஸ்பென்ஸ் திரைக்கதையுடன் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தான் "தனி ஒருவன்". இயக்குநர் மோகன் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோரின் முயற்சியாக வெளிவந்த இந்த படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுகளை பெற்றது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, கடந்த 2023ம் ஆண்டு, "தனி ஒருவன் 2" குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஒரு அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.
2015ல் வெளிவந்த "தனி ஒருவன்" திரைப்படம், சமூகத்தில் இடம்பெறும் ஒழுக்கமற்ற ஆட்சியாளர்கள் மற்றும் அரசியலமைப்பில் தோன்றும் குழப்பங்களுக்கு எதிராக உருவான கதையாக காணப்படுகின்றது. 2023ம் ஆண்டு வெளியான வீடியோவில் "தனி ஒருவன் 2" பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியாகியதுமே, ரசிகர்களிடம், “எப்போது என்ன கதைக்களம்?” , “அரவிந்த் சாமி மீண்டும் வருவாரா?” என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்குப் பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் ஒரு ஆண்டுக்கு மேல் சென்றுவிட்டது.
இந்த நிலைமையில், இயக்குநர் மோகன் ராஜா, சமீபத்தில் ஒரு செய்தி ஊடகத்துடன் பேசியபோது, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் நடந்த உரையாடலைக் கூறினார்.
அவருடைய வார்த்தைகளில், “அர்ச்சனாவுடன் நான் இப்படம் தொடர்பாக பேசி கொண்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘இது சரியான நேரம் இல்லை. இது கண்டிப்பாக நடக்கும், ஆனால் கொஞ்சம் சினிமா துறையின் நிலை மேம்படட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.”
இந்த அறிக்கையை வைத்து பார்த்தால், படத்தின் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், தாமதமாக இருந்தாலும் உருவாகப்போகிறது என்றும் நிச்சயமாகத் தெரிகிறது.
Listen News!