• Jul 18 2025

" சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சி இனி இல்லையா..? சோகத்தில் ரசிகர்கள்...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிரபலமான ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்றுதான் பலரால் அழைக்கப்படுகிறது. மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாலிவுட் சிங்கிங் மற்றும் பலவகையான ரியாலிட்டி ஷோக்களால் மக்களிடையே பெரும் பிரபலத்தை பெற்றுள்ளது.


பாடல், நடனம் மற்றும் விளையாட்டு வகைகளில் இத்தனை ஆண்டுகளாக விஜய் டிவி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதை பெரும்பாலும் அதன் ரியாலிட்டி ஷோக்களால் தான். அதில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி சிறந்த உதாரணமாக இருக்கின்றது.


இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் புதிய சீசன் சிறுவர்களுக்கான கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது விஜய் டிவி தனது புதிய சூப்பர் சிங்கர் சீசனுக்கு மாற்றங்களைச் செய்து உள்ளது. ஏற்கனவே சினிமா பாடல்கள் பாடும் நிகழ்ச்சி ஆக இருந்த இந்த ஷோ இப்போது பக்தி சூப்பர் சிங்கர் என்ற பெயரில் பக்தி பாடல்களுடன் மாறியுள்ளதாம். இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement