• Oct 06 2025

மீண்டும் தொடங்குகிறது லோகாவின் பயணம்... படக்குழுவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films மூலம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘லோகா’ (Lokah) ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.


திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ள இந்த திரைப்படம், தற்போது தனது இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

‘லோகா: Chapter 1 – Chandra’ என பெயரிடப்பட்ட இந்தப் படம், மனித உணர்வுகளையும், சமூக கேள்விகளையும் நுண்ணியமான கதை சொல்லலுடன் கூறி, சினிமா விமர்சகர்களிடமும், பொதுமக்களிடமும் கவனம் பெற்றது.


படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். 

“லோகா” திரைப்படம் மிகக் குறைந்த நாட்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது படக்குழுவிற்கு மகிழ்ச்சியை அளித்திருந்தது. இதனாலேயே, தற்போது அதன் பாகம் 2–ஐ துவக்குவதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement