• May 01 2025

54வது பிறந்தநாளைக் கொண்டாடும் அஜித்..!சொத்து மதிப்பைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் தான் தல அஜித் குமார். தனது நடிப்பால் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையாலும் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார். இன்று மே 1ம் திகதி உலகளாவிய ரீதியில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நாளாக இருந்தாலும், தமிழகத்தில் இது ஒரு வித்தியாசமான தன்மை பெறுகிறது. ஏனெனில், இந்த நாளில் தான் அஜித் குமாரின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது.


இன்று தனது 54வது பிறந்த நாளை கொண்டாடும் அஜித்திற்கு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பலர் அவரது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதுடன் சிலர் அவருக்காக மரக்கன்றுகள் நடுதல், இலவச உணவளிப்பு போன்ற சேவைச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், மாஸ் கம்பேக் என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாட்டு வசூல் இரண்டிலும் இந்தப் படம் வெற்றி நடைபோட்டு, அஜித் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த படமாக கருதப்படுகின்றது.


இந்த படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகைத் தாண்டி அஜித் குமார், மோட்டார் ரேஸிங் உலகிலும் தன்னுடைய பெயரை பதித்து வருகின்றார். சமீபத்தில் அவர் பங்கேற்ற ஐந்து சர்வதேச ரேஸ் போட்டிகளில், இரண்டு இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இன்று வெளியான தகவல்களின் அடிப்படையில், அஜித் குமார் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடி முதல் ரூ. 400 கோடி வரை இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த எண்ணிக்கை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவரின் திரைப்படங்களிலிருந்து வரும் வருமானம், மோட்டார் ரேஸிங், மற்றும் நிறுவனங்களுடன் கூடிய விளம்பர ஒப்பந்தங்களைக் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement