• Apr 18 2026

கமல் என்னை ஹீரோ ஆக்கினார்..ஆனால் ரஜினி என்னை காமெடியன் ஆக்கிவிட்டார்: கோபத்தில் பகத் பாசில்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பகத் பாசில் தற்போது ’வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தில் தான் காமெடி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

தமிழ் உள்பட பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பகத் பாசில் நடித்து வரும் நிலையில் அவர் தனது கேரக்டர் குறித்த ஒரு முக்கிய தகவலை சமீபத்தில் மலையாள ஊடகம் அளித்த பேட்டிகள் தெரிவித்துள்ளார். 



‘விக்ரம்’ படத்தில் நான் ஒரு டெர்ரரான கேரக்டரில் நடித்தேன். கமல்ஹாசன் கேரக்டரை விட எனக்கு அந்த கேரக்டரில் முக்கியத்துவம் இருந்தது. கிட்டத்தட்ட அந்த படத்தின் ஹீரோ நான் தான் என்று ரசிகர்களால் கூறப்பட்டது. இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தில் என்னை இயக்குனர் ஞானவேல் ஒரு காமெடி கேரக்டரில் பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

முதலில் ரஜினிகாந்த் படத்தில் காமெடி கேரக்டரா? என்று நான் யோசித்த நிலையில் அதன் பிறகு அந்த கேரக்டரை விரிவாக என்னிடம் கூறிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அதனை அடுத்து தான் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

பகத் பாசிலை இதுவரை டெரர் வில்லனாகவும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாகவும் குணசித்திர கேரக்டராகவும் பலவிதமான கேரக்டர்களில் பார்த்த நிலையில் தற்போது அவர் காமெடியனாக நடித்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement