• Apr 17 2026

’எதிர்நீச்சல்’ முடிந்ததும் தொழிலை மாற்றிய ஹரிபிரியா.. வருமானம் கொட்டுதாமே..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ என்ற சீரியல் நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் சத்யபிரியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எதிர்நீச்சல்’ முடியப்போகிறது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில் ரசிகர்கள் சோகமாகி உள்ளனர் என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த சீரியல் நிறைவு பெற உள்ளதாக எண்ணி ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வந்த ஹரிப்பிரியா தற்போது புதிய தொழிலை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சீரியலில் நடிக்கும் முன்பே அவருக்கு இருந்த கனவுகளில் ஒன்று தான் ஆங்கரிங் செய்ய வேண்டும் என்ற நிலையில் தற்போது அவர்  அந்த ஆங்கரிங் தொழில் தான் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சன் லைஃப் சேனலில் அவர் நேயர்களுக்கு பிடித்த பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் இதன் மூலம் அவருக்கு வருமானம் அதிகமாக கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிப்படியாக ஆங்கரிங் தொழிலில் முன்னேறி ஒரு முன்னணி ஆங்கர் ஆக மாற வேண்டும் என்பதே அவரது கனவு என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement