• Apr 17 2026

விக்ரம் அடுத்த படத்தில் இணைந்த ‘வேட்டையன்’ ‘ராயன்’ நடிகை.. சூப்பர் போஸ்டர் ரிலீஸ்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சியான் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’சியான் 62’ படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் சற்று முன் வெளியிட்டு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரம் நடித்த 61 வது திரைப்படமான ’தங்கலான்’ திரைப்படம் தேர்தலுக்குப் பின் ரிலீசாக உள்ள நிலையில் அவர் நடித்த 60-வது திரைப்படமான ‘துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் விக்ரம் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை ’சித்தா’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அட்டகாசமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ’நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களில் நடித்த துஷாரா விஜயன் ’அநீதி’ படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ மற்றும் தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement