• Sep 16 2025

புதிய சீரியலுக்கு கமிட்டான சிறகடிக்க ஆசை மீனா... அதுவும் எந்த சீரியல் தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களின் மனதில் ஆழமான பதிப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் குடும்பத் தொடரான "மகாநதி", தற்போது மலையாள மொழியில் ரீமேக் வடிவத்தில் உருவாக இருக்கிறது.

இந்த புதிய மலையாள சீரியலுக்கும் "மகாநதி" என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை கோமதி ப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.


இந்த புதிய சீரியல் விரைவில் மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்-இல் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோமதி ப்ரியாவின் திடீர் மாறுதல் மற்றும் மொழி தாண்டிய பயணம், இந்தத் தொடருக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.


தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" சீரியலில், ஹீரோயினாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி ப்ரியா, மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறார். அவருடைய நடிப்பு, அழுத்தமான உணர்வுப் பங்களிப்பு மற்றும் மனதைக் கவரும் அழகு என்பன அனைவரையும் ஈர்த்துவிட்டது.

ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ள கோமதி ப்ரியா, இப்போது மலையாள மொழி ரசிகர்களை கவர ரெடியாகி வருகிறார்.

Advertisement

Advertisement