• Jun 28 2025

"டெடி" திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக், எப்போ ரிலீஸ்னு தெரியுமா ?

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கி ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் அனிமேஷனுடன் கூடிய மோஷன்-கேப்சர் படமாக வெளிவந்த "டெடி" திரைப்படமானது ரசிகர்களின் கவலையான விமர்சனங்களை பெற்ற போதும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது.


இப் படத்தின் ஆஃபிஸியல் தெலுங்கு ரீமேக் படமாக உருவாகி வரும் "Buddy" திரைப்படமானது தமிழில் வெளியிட்ட கே.இ.ஞானவேல்ராஜாவின்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்க  இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அல்லு சிரிஷ் ,அஜ்மல் அமீர்,பிரிஷா சிங் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று வெளியான "Buddy" திரைப்படத்தின் ஆஃபிஸியல் ட்ரைலர் ஆனது ரசிகர்களை மேலும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது.தமிழுடன் ஒப்பிடும் போது சில மாறுதல்களுடன் கதை அமைக்கப்பட்டுள்ளதை ட்ரைலர் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.ட்ரைலரின் முடிவில் படமானது வருகிற  ஜூலை 26 ஆம் திகதி திரைக்கு வரவிருப்பதாக  அறிவிப்பும் வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement