• Jul 18 2025

"Freedom" திரைப்படத்தில் மீண்டும் சசிகுமார்..!எப்போது திரையில் தெரியுமா ?

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் திரையுலகில் தரமான கதைகள் கொண்ட படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் போது, நம் நாட்டின் பெயர் பெற்ற இயக்குனர் சசிகுமார் மீண்டும் ஒரு புதிய படத்துடன் திரை உலகிற்கு வருகிறார். கடந்த சில வருடங்களாக வெற்றி பெற்ற படங்களால் சசிகுமார் ஒரு தனித்துவமான படைப்பாளியாக நிலைநிறுத்தியவர். இப்போது அவர் உருவாக்கும் புதிய படம், திரை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மீண்டும் ஒரு அதிரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


"Freedom" திரைப்படத்தினை  இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீனிவாசன்இயக்குகின்றார். இவர் ஏற்கனவே சில குறும்படங்கள், மற்றும் சமூக அரசியல் சார்ந்த ஆவணப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். அவரின் இயக்கத்தில் "சமூக உணர்வும் கலைச் சார்பும் நன்கு இணைந்திருக்கும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமாருடன் இவரது காட்சிகள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக அமையும் எனக் கூறப்படுகிறது. மேலும், பாஸ்கர், திலீப், மற்றும் ரேமண்ட் கிஷோர் போன்ற பல தளங்களில் திகழும் நடிகர்களும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு  சாம் சி.எஸ்இசையமைத்துள்ளார்.


மேலும் இந்த திரைப்படம் “Freedom” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் திகதி திரைக்கு வரவிருப்பதாக தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு ஜூலை மாதம் வெளியாக உள்ளது . மேலும் "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் பெற்று கொடுத்த  நல்ல பெயரை இந்த படம் மூலம் பெறுவர் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள் 



Advertisement

Advertisement