• May 17 2025

ஹாலிவூட்டில் மதிப்பிழந்த இயக்குநர்கள்..! இதன் பின்னணி என்ன தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் பலர் காலத்திற்கேற்ற படங்களை உருவாக்கி வருகிறார்கள். அந்தவகையில் சங்கர், லிங்குசாமி மற்றும் மணிரத்தினம் எனப் பல முன்னணி இயக்குநர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர்கள். எனினும் சமீபகாலமாக சங்கர், லிங்குசாமி இயக்கிய படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் போனதுடன் மணிரத்தினம் இயக்கிய படங்களே  தொடர்ந்தும் வெற்றியைப் பெறுகின்றது.

சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 போன்ற பல பிரமாண்ட படங்கள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும், அவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில், மணிரத்தினம் இயக்கிய "பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2" போன்ற படங்கள் மெகா ஹிட் கொடுத்திருந்தன.


அத்துடன் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் , சண்டக்கோழி 2 போன்ற படங்கள் படைக்குழு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. எனினும் ஒருகாலத்தில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த இயக்குநராக லிங்குசாமி காணப்பட்டார். தற்போது அந்த மாஸான இடத்தை இழந்துள்ளமை வருத்தத்தை அளித்துள்ளது.

சங்கர் தமிழ் சினிமாவில் பெரிய கனவுகளைத் திரையில் காட்டக்கூடிய இயக்குநராக அறியப்படுகிறார். இவர் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தாலும் தற்பொழுது அவரது படங்களுக்கான கேள்விகள் குறைந்தே வருகின்றன. தற்பொழுது இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறிவருகின்றது. இதற்கு ரசிகர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

Advertisement

Advertisement