• May 17 2025

இளம் நடிகையுடன் ஜோடி சேர்ந்த நடிகர் விஷ்ணு விஷால்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் "பிரேமலு" படத்தின் மூலம் சூப்பர் ஹிட் நாயகியாக அறிமுகமாகி நடிகை மமிதா பைஜூ தமிழ் சினிமாவில் "ரெபல்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தளபதி விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்படத்தில் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. விஜய் படத்திற்காக பிரேமலு 2 படப்பிடிப்பினை ஒத்தி வைத்துள்ள இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார்.


அதாவது மமிதா பைஜூவின் மூன்றாவது தமிழ் திரைப்படமாக விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்கும் "இரண்டு வானம்" படம் பிரபலமாகத் தெரிவாகி உள்ளது. இயக்குநர் ராம் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அவர்களின் மூன்றாவது கூட்டணியாக உருவாகி உள்ளது மேலும் "முண்டாசுப்பட்டி" மற்றும் "ராட்சசன்" படங்களின் வெற்றியை அடுத்து இது அபூர்வ வெற்றியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த படம் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார். குறித்த போஸ்ட்டரினை விஷ்ணு விஷால் தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அப் பதிவில் 1st - Comedy, 2nd - Thriller, 3rd - Love என குறிப்பிடுள்ளார்.

Advertisement

Advertisement