தமிழக அரசியலில் தற்போது யானை சின்னம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உரத்த விவாதம், சட்ட முறையில் ஒரு முக்கிய திருப்புமுனைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தவெக கட்சி தனது கட்சிக்கொடியில் யானை சின்னத்தை உபயோகித்த நிலையில், அதனை தடை செய்யவேண்டும் என பகுஜன் சமாஜ் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றம் அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட பிறகு, ஜூலை 3ஆம் தேதி தீர்ப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், சமூக ஊடகங்களில், குறிப்பாக தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த வழக்கு ஒரு அரசியலில் ஏற்படும் மோதலாகவே பார்க்கப்படுகின்றது.
“இந்த தீர்ப்பு தளபதி விஜய்க்கு சாதகமாக வரும்” என்ற எதிர்பார்ப்பு சமூக ஊடகங்களில் பதிவாகி வருகின்றது. இந்த வழக்கு ஒரு சின்னத்தின் உரிமை சிக்கலாக மட்டும் இல்லாமல், ஒரு கட்சி வளர்ச்சி பெறும் பொழுது அந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் முயற்சி என்ற இரட்டை தரப்பிலேயே பார்க்கப்படுகின்றது.
Listen News!