• Apr 18 2026

தந்தையின் ஆசையை நிஜமாக்கிய நடிகர் கலாபவன் மணியின் மகள்.. அப்படி என்ன கனவு தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்பதும், தனது ஒரே மகளை மருத்துவராக்க வேண்டும் என்பதும் தான் மறைந்த நடிகர் கலாபவன் மணி அவர்களின் வாழ்நாள் கனவாக இருந்தது. காமெடியாலும், குணச்சித்திரங்களாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த கலாபவன் மணியின் வாழ்க்கை கனவுகள், இன்று அவரது மகள் மூலம் நிஜமாகி உள்ளது.


தந்தையை இழந்த பேரிழப்பையும் தாண்டி, அவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற கடினமாக உழைத்த ஸ்ரீலட்சுமி, தற்போது தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கவிருக்கும் நிலையில் இருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரையும் நெகிழச் செய்து வருகிறது.

கலாபவன் மணி மறைந்த போது, அவரது மகள் ஸ்ரீலட்சுமி 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். வயது குறைவு, வாழ்க்கையை புரிந்து கொள்ளும் நிலையிலேயே தந்தையை இழந்த அந்த தருணம், அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. ஆனால் அந்த இழப்பே, அவரது வாழ்க்கை பாதையை தீர்மானிக்கும் சக்தியாக மாறியது.

தந்தையின் புகழ், பெயர், அடையாளம் இருந்தாலும், ஸ்ரீலட்சுமி தனது மருத்துவ கனவுக்காக தனிப்பட்ட முறையில் கடுமையாக உழைத்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி, சோதனைகளையும் மன அழுத்தங்களையும் கடந்து, தற்போது தனது MBBS மருத்துவப் படிப்பை முடிக்கும் இறுதி கட்டத்தில் இருக்கிறார்.

Advertisement

Advertisement