தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களாலும், சமூக கருத்துக்கள் மற்றும் மனித உணர்வுகளை அழகாக சொல்லும் இயக்குநராகவும் அறியப்படுபவர் ராஜு முருகன். ரசிகர்களிடம் தனி அடையாளத்தை பெற்றுள்ள அவர், தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘MY LORD’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘MY LORD’ திரைப்படம் நடிகர் சசிகுமாருக்கு மற்றொரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. எளிமையான கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான நடிப்பையும் ரசிகர்கள் எப்போதும் விரும்பும் நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பது குறித்து ஆரம்பம் முதலே நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுக்கிடையேயான நடிப்பு மற்றும் கதையின் உணர்வுபூர்வமான பயணம் தான் ‘MY LORD’ படத்தின் மையமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பல படங்களில் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களால் கவனம் ஈர்த்துள்ள ஷான் ரோல்டன், ‘MY LORD’ படத்திற்கும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இசையமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘MY LORD’ திரைப்படம் காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதும், பலரிடமும் ஒரு கேள்வி எழுந்தது.“ஒரு சமூக அல்லது குடும்ப கதை சொல்லும் படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன தொடர்பு?” என்ற கேள்வி தான் அது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன், “‘MY LORD’ திரைப்படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் கேட்கிறார்கள். உண்மையிலேயே இந்த படத்துக்கும் காதலர் தினத்துக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. ஏனென்றால், இந்த ‘MY LORD’ படம் சசிகுமாருக்கும் சைத்ராவுக்கும் இடையே உள்ள காதலை பற்றிய படம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,“இது வெறும் காதல் படம் மட்டும் இல்லை. அழகான கணவன் – மனைவி உறவின் அன்பு, புரிதல், மரியாதை ஆகியவற்றை பேசும் படம். அதனால் தான் இந்த படம் காதலர் தினத்திலேயே வெளியாக வேண்டும் என்று நினைத்தோம்.”என விளக்கம் அளித்துள்ளார்.
Listen News!