• Jul 16 2025

புதிய பயணத்திற்காக ரஜினியை சந்தித்த கமல்..! என்ன நடந்தது தெரியுமா.?

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இரு திலகங்கள்… எப்போதும் இரு பாதைகளில் சென்றாலும், அன்பிலும் மரியாதையிலும் ஒரே திசையில் உள்ளவர்கள். அவர்கள் தான் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த இருவரும் நண்பர்கள் மட்டுமல்ல, 40 வருடங்களுக்கு மேல் நம்பிக்கையாக நிலைத்து நிற்கும் மனிதர்கள்.


இந்த சினிமா நட்பை மிஞ்சிய தருணமாக இன்று இணையத்தில் ஒரு புகைப்படம் ஒளிர்ந்து வருகின்றது. அந்த புகைப்படம் எதுவென்றால், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள கமல்ஹாசன், தனது புதிய அரசியல் பயணத்தை ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்ட அற்புதமான தருணம்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் செயல்பட்டு வருகிறார். 'மக்கள் நீதி மையம்' கட்சி வழியாக சமூக நலன் சார்ந்த பல கருத்துகளை அவர் முன்வைத்து உள்ளார். இந்நிலையில், தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த முக்கியமான அரசியல் பொறுப்பை ஜூலை 25ம் தேதி கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக ஏற்க உள்ளார். அவருக்கு அளிக்கப்படும் இந்த பொறுப்பை, மக்கள் மற்றும் திரையுலகமே பெரிதும் வரவேற்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, தனது நீண்ட நாள் நண்பர் ரஜினிகாந்தை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் கமல்ஹாசன். அங்கு இருவரும் மனதளவில் உரையாடிக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், இன்று கமல்ஹாசனின் அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில் பகிரப்பட்டது.

அந்த புகைப்படத்துடன், கமல் ஹாசன், “என்னுடைய புதிய பயணத்தை என் நண்பர் ரஜினியுடன் பகிர்ந்துகொண்டேன். நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். 

Advertisement

Advertisement