தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கு கதவுகளைத் திறக்கும் இயக்குநர்களில் ஒருவர் தமிழ் தயாளன். சமீபத்தில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான "கெவி", மலை வாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் புதிய நாயகனாக அறிமுகமாகும் ஆதவன், கதாநாயகி ஷீலா நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தமிழ் தயாளன் சமூகவியல், இயற்கையின் அழகு, மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாழ்க்கைபாடுகளை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர். “கெவி” திரைப்படமும் அதனைச் சார்ந்த முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது.
இந்த படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான பாடல் “மா மலையே”, இசை ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து, பாடியவர் பாடகர் தேவா.
இப்பாடல் குறித்து வைரமுத்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு உணர்வுபூர்வமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மலை வாழ் மக்களின் வாழ்க்கையை வருத்தப்படும் வார்த்தைகளால் வடித்திருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
Listen News!