ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன், 2024 ஜூன் மாதம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரும், இந்த வழக்கில் பிரதியாக உள்ள நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட ஆறு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.
இந்த ஜாமீனை எதிர்த்து, விசாரணையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், சாட்சிகள் மிரட்டப்படலாம் என்றும் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் விசாரித்தனர்.
தீர்ப்பில், “சட்டத்திற்கு மேலானவர் யாரும் இல்லை. உயர் நீதிமன்றம் இயந்திரபோன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இது விசாரணையை பாதிக்கக்கூடும்,” எனக் கூறி, 7 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்துள்ளது.
Listen News!