சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெகுஜன எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலகளாவிய ரஜினி ரசிகர்களும் திரையரங்குகளில் உற்சாகம் காட்டி வருகின்றனர்.
திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களின் ஆதரவு வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வட அமெரிக்காவில், படம் அபாரமான ஓப்பனிங் வசூலைப் பெற்றுள்ளது. புதிய தகவலின்படி, கூலி திரைப்படம் தனது முதல் நாளில் மட்டும் $3.04 மில்லியன் (சுமார் ₹25 கோடி) வசூலித்துள்ளது. இது இதுவரை எந்த தமிழ் படமும் சாதிக்காத அளவிலான ஓப்பனிங் வசூலாகும். இந்த சாதனை மூலம், கூலி படம் வட அமெரிக்காவில் தமிழ் சினிமாவின் வரலாற்றை முற்றாக மாற்றி அமைத்துள்ளது.
தொடர்ந்து அதிகமான ஷோக்கள், ஹவுஸ் புல் தியேட்டர்கள், மேலும் வளர்ந்துள்ள எதிர்பார்ப்பு ஆகியவையால், வருகிற நாட்களில் கூடுதல் வசூலை ஈர்க்கும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.
Listen News!