• Aug 24 2025

‘தலைவன் தலைவி’ சூப்பர் ஹிட்..! இதுவரை எத்தனை கோடியை வசூலித்துள்ளது தெரியுமா.?

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக திகழ்கிறது ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


இப்படம் கடந்த ஜூலை 25, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தற்போது, படத்தின் தயாரிப்பு நிறுவனம், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இப்படத்தில் விஜய் சேதுபதி தனது சிறந்த நடிப்பை நிரூபித்திருந்தார். அதே சமயம், நித்யா மேனன் அவரது இயல்பான நடிப்பால் கேரக்டரில் ஈர்க்கக்கூடிய பங்களிப்பை செய்திருந்தார். திரைப்பட உலகத்தில், ஒரு படத்தின் வெற்றி கேள்விக்குறியாய் பார்க்கப்படும் போது, 100 கோடி வசூல் என்பது எப்போதும் ஒரு முக்கியமான அடையாளமாகும்.

அத்தகைய வசூலை ‘தலைவன் தலைவி’ திரைப்படம் பெற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.    

Advertisement

Advertisement