• Apr 17 2026

பிரபாஸின் வெறித்தனம்- சலார் திரைப்படம் மூன்றாம் நாளில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸ் நடிப்பில் கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சலார்.இப்படத்தில் நடிகர் பிரித்விராஜும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இரண்டு உயிர் நண்பர்கள் பரம விரோதிகளாக மாறுவது தான் இந்தப் படத்தின் கதை. அதனை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல்.

பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது சலார். முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்ததால், 178 கோடி ரூபாய் வசூலித்து இந்தாண்டின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மாஸ் காட்டியது.


 அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 117 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.ஆகமொத்தம் முதல் இரண்டு நாட்களில் 295 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை படைத்தது.

அந்த வகையில் இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இதனால் பிரபாஸ் உட்பட சலார் படக்குழுவினர் கடும் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement