• Apr 16 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளர்கள் இருவர் செல்போன் வைத்திருக்கின்றனரா?- வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.  புது விதமாக இந்த சீசனில் மட்டும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்ற கான்சப்ட்டை கொண்டு வந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து ரசிகர்களுக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேறிய சர்ச்சை ஒருபக்கம் இருக்க, அடுத்து தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இது ஒருபுறம் இருக்க,தற்போது ஒரு போட்டியாளர் செல்போன் வைத்திருக்கிறார் என கூறி வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் நீ தான் தினமும் வீட்டுல பேசிட்டு இருக்கியே என விசித்ரா அர்ச்சனாவை பார்த்து சொல்லி இருக்கிறார்.

அதனால் அவர் செல் போன் வைத்திருக்கிறாரா என நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த ஆடியோவை கேட்கும்போது "நீ தினமும் வீட்டுக்கு போகணும்னு பேசிட்டு இருக்கியே" என்று தான் விசித்ரா கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement