இயக்குநர் rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் சூர்யா வக்கீல் கெட்டப்பில் நடிப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் rj பாலாஜியும் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தினை தயாரித்து வருகின்றது. படத்திற்கு அறிமுக இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் படத்திற்கான டிஜிட்டல் வியாபாரம் இன்னும் முடிவுக்கு வராமையினால் படம் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த வியாபாரம் முடிவடையாத காரணத்தினால் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதைவிட இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் கோர்ட் செட்டில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ரெட்ரோ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!