பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி ஆகியோரின் நடிப்பில் "DD NEXT LEVEL" எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் மே 16 வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படம் குறித்து "DD NEXT LEVEL' படத்தில் என் படங்களின் SPOOF இருக்கு. அதில் நானே நடித்து இருக்கிறேன். ஒரு மூணு நாள் வேலை தான் ஆனா உங்க படங்கள் மாதிரியே நீங்க பண்ணனும் என்று சந்தானம் மற்றும் பிரேம் கேட்டு பண்ணி இருக்காங்க. சந்தானம் என்கிட்ட, சார் நீங்க கேட்டப்ப எனக்கு டேட்டே இல்லனா கூட நீதானே என் பொன்வசந்தம்' படம் பண்ணேன். நீங்க எனக்காக இதில் நடிக்கணும் என்று சொன்னப்போ, உங்களுக்காக மட்டும் நடிக்கிறேன் என்று நடித்தேன். ஆனா, நான் என்ஜாய் பண்ணி பண்ணேன், அது எல்லாமே தியேட்டர்ல பார்க்கும்போது பயங்கரமா இருக்கும் " என கூறியுள்ளார்.
Listen News!