• May 15 2026

தனுஷின் 'கர' படத்திற்கு இவ்வளவு டிமாண்டா? முதல் நாள் முன்பதிவிலேயே கோடியைத் தொட்ட புக்கிங்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிவிப்பிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், தற்போது வெளியீட்டிற்கு முன்பே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 


குறிப்பாக, தனுஷின் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் படத்தின் கதைத் தளம் குறித்து ரசிகர்களிடையே அதிக ஆர்வம் நிலவுகிறது.

இந்நிலையில், ‘கர’ திரைப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே ரசிகர்கள் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படம் வெளியான பின்னரும் நல்ல வசூலைப் பெறும் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன.

Advertisement

Advertisement