• May 15 2026

விஜய்யின் வீட்டை இடிக்க திட்டம்.. ஏன் இந்த முடிவு.? சந்திரசேகர் தெரிவித்தது இதுதான்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், அரசியல் களத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில் அவர் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

69 படங்களில் நடித்த விஜயின் கடைசி படமான ஜனநாயகன், தணிக்கை சான்றிதழ் சிக்கலால் இன்னும் திரையரங்கை வந்தடையவில்லை. 

பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த படம் தாமதமாகி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக லீக் செய்யப்பட்டது திரைத்துறையையே கொந்தளிக்க வைத்தது. லீக் எப்படி நடந்தது யார் பின்னால் இருக்கிறார்கள் என்ற விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் விஜய் தொடர்பான மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வரும் விஜய், கட்சி அலுவலகத்தை திருவான்மியூரில் அமைத்துள்ளார். இதற்கிடையில் அவர் முன்பு வசித்த சாலிகிராமம் பகுதி வீட்டை இடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். அந்த பழைய வீட்டை இடித்து அதற்கு பதிலாக பெரிய அப்பார்ட்மெண்ட் கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த வீட்டில் முன்பு விஜய் ஆண்டனி ஸ்டுடியோவும் சந்திரசேகரின் அலுவலகமும் செயல்பட்டு வந்தன. தற்போது இரண்டும் காலி செய்யப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் புதிய கட்டிடம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement