• May 15 2026

20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவுக்கு இந்த நிலையா.? ஐந்து ஆண்டு போராட்டத்தின் வெளிப்பாடு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 20,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இசை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகி சுஜாதா மோகன். 

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாடி தென்னிந்திய சினிமாவின் முக்கிய குரல்களில் ஒருவராக திகழும் அவர், இசையமைப்பாளர் மோகனின் மனைவி. அவர்களது மகள் ஸ்வேதா மோகனும் தற்போது பிரபல பின்னணி பாடகையாக விளங்குகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் சுஜாதா மோகனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த அவர் ரசிகர்களை கலங்க வைக்கும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில்,"கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை. எனக்கு தொண்டையில் ஒரு பிரச்சினை உள்ளது. அதனால் முன்பை போல பாட முடியவில்லை..' என மனம் திறந்து பேசிய சுஜாதாவின் வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

தன் வாழ்நாள் முழுவதும் இசையை கொடுத்த குரல், இன்று தொண்டை பிரச்சினையால் அவதிப்படுவது ரசிகர்களை ஆழமாக பாதித்துள்ளது. 

இந்த உணர்ச்சிகரமான பகிர்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement