• Jun 19 2025

விக்ரம் பிரபுவின் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட தனுஷ்...!வைரலாகும் எக்ஸ் தள பதிவு...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக  வலம் வருபவர் விக்ரம் பிரபு  பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . இந்த நிலையில்  இவர் நடிப்பில்வெளியாக உள்ள திரைப்படம்  "லவ் மேரேஜ்" .இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றது. 


அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்திற்கு ‘லவ் மேரேஜ்’ எனத் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கௌவுதம் மேனன், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும்  சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில்  ஷான் ரோல்டன்  இசையமமைத்துள்ளார்.


இந்த திரைப்படத்தின்  கதைகளம் கிராமத்தினை மையம் கொண்டும் ,எல்லோருடைய  மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கபடுகின்றது. மேலும்  குறிப்பிட்ட திருமண வயதினை கடந்த பின்பு திருமணம்  செய்து கொள்வதற்கு  போராடும் ஆண்களின் நிலையை நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் விளங்கி  கொள்ளக்கூடிய வகையில் நிகழ்வுகளை  மையமாகக் கொண்டு திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூன் 27ஆம் ரிலீஸ் ஆக இருப்பதனால்  இப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த படத்தின்  டிரெய்லரை  பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.






Advertisement

Advertisement