• Jun 14 2026

பெயர் கூட சரியா சொல்ல முடியலையா? ‘கர' பட ஹீரோயினை நக்கலடித்த தனுஷ்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'கர' தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து பின்னணியில், ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பட விழாவில் பேசிய தனுஷ், படத்தின் பெயர் குறித்து பரவிய தவறான உச்சரிப்புகளை பற்றி நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். 

“கர பட பெயரை எல்லாரும் தப்பா தான் சொல்றாங்க. ஹீரோயின் கூட ‘காரா’னு சொல்றாங்க, தயாரிப்பாளரும் அப்படியே சொல்றாங்க. ஆனா பெயர் ‘கர’. எப்படி வேணா சொல்லுங்க, தியேட்டருக்கு வந்து படம் மட்டும் பாருங்க” என்று அவர் கூறினார்.

மேலும், ரசிகர்கள் படத்தை பார்க்க விரும்பினால் எந்த பெயரிலும் அழைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் சிரித்துக்கொண்டே தெரிவித்தது நிகழ்வில் சிரிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement