• May 16 2026

போருக்கு போகணும் போகணும் .. பொருள எடுத்து வாய்யா.. ‘ராயன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் இந்த படத்தின் பாடல் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பதும் ஏஆர் ரகுமான் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடலில் உள்ள வரிகளே இந்த படத்தின் கதையை கிட்டத்தட்ட யூகிக்கும் வகையில் உள்ளது என்பதும் இந்த பாடல் வெளியிட்ட பிறகு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில்  தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.


Advertisement

Advertisement