• Apr 17 2026

இதுவரை இந்திய சினிமாவில் காணபிக்கப்படாத லொக்கேஷன்.. தனுஷ் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த இருக்கும் லொக்கேஷன் இதுவரை தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் காண்பிக்கப்படாத லொக்கேஷன் என்று கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’குபேரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவன் திடீரென பணக்காரன் ஆவது அதன் பிறகு மீண்டும் ஏழ்மை நிலைக்கு வருவது தான் கதை என்று கூறப்படுகிறது.



இந்த படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பாங்காங் பகுதியில் நடைபெற இருப்பதாகவும் இங்கு உள்ள ஒரு அற்புதமான இயற்கை எழில் கொஞ்சம் இடத்தில் தான் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதுவரை இந்திய படங்கள் எதுவுமே இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தவில்லை என்றும் ரசிகர்களுக்கு இந்த லொக்கேஷன் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ், ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் தனுஷ் - நாகார்ஜுனா சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்சன் காட்சிகள் இந்த பகுதியில் படமாக்கப்பட இருப்பதாகவும் இங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement