• Jun 08 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலவே திடீரென பின்வாங்கிய தனுஷ்.. இந்த நடிகரை பார்த்து இவ்வளவு பயமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கிய ’லால் சலாம்’ திரைப்படத்தை வெளியிட தேதி அறிவித்துவிட்டு அதன்பின் பின்வாங்கியது போலவே தனுஷும் தனது ’ராயன்’ படத்தை வெளியிட தேதி அறிவித்துவிட்டு அதன்பின் பின் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு பின்வாங்கலுக்கும் விஜய் சேதுபதி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் பொங்கல் ரிலீஸில் இருந்து வெளியேறி பிப்ரவரி மாதம் தான் ரிலீஸ் ஆனது என்பதும் இதற்கு பொங்கல் தினத்தில் விஜய் சேதுபதியின் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ உட்பட சில படங்கள் வெளியாக இருப்பதால் அந்த படத்துடன் போட்டி போட வேண்டாம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முடிவு செய்ததாக கூறப்பட்டது.



இந்த நிலையில் தனுஷ் நடித்து இயக்கி உள்ள ’ராயன்’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதியில் ’ராயன்’ திரைப்படம் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ ஜூன் 14ஆம் தேதி வெளியாக இருப்பதை அடுத்து ’ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் ஜூலை கடைசியில் தான் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’குரங்கு பொம்மை’ இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகிய ’மகாராஜா’ திரைப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்ற நிலையில் ‘ராயன்’ திரைப்படமும் தனுஷின் 50வது படமாக அமைந்துள்ளது. ஒரே நாளில் இரு பெரிய நடிகர்களின் ஐம்பதாவது படம் வெளியானால் சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் விஜய் சேதுபதியுடன் மோத தனுஷ் விரும்பவில்லை என்றும், அதனால் தான் ஜூலைக்கு ‘ராயன்’ தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் சில வாரங்கள் இடைவெளியில் வெளியாகும் விஜய் சேதுபதி ஐம்பதாவது படம் மற்றும் தனுஷின் ஐம்பதாவது படம் இதில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement