• May 15 2026

’குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி தீபிகா படுகோன்? வேற லெவலில் ஆதிக் ரவிச்சந்திரன்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் தவிர வேறு எந்த நடிகரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பாபிதியோல் மற்றும் சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகி அதிரடி ஆக்சன் கேரக்டரில் நடிக்க இருப்பதால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் சரியாக வரும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

தீபிகா படுகோன் தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் நிலையில் அவர் தென்னிந்திய படங்களில் நடிப்பாரா? குறிப்பாக அஜித் படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடித்த நிலையில் அஜித்துக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த நிலையில் தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து கசிந்த தகவல் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் இன்னும் எதிர்பாராத சில நட்சத்திரங்கள் இணைவார்கள் என்றும் இது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement