• May 15 2026

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் திடீர் புகைச்சல்.. அன்ஷிதாவுக்கு மட்டும் அதிக முக்கியத்துவமா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதல் வாரத்தில் நாஞ்சில் விஜயன் என்ற கோமாளி, நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் இரண்டாவது வாரத்தில் அன்ஷிதாவுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சக கோமாளிகள் புகைச்சலுடன் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசன் தொடங்கும் போதே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தொடங்கியது. குறிப்பாக வெங்கடேஷ் பட் உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ள அதன் பிறகு ஒரு வழியாக மாதம்பட்டி ரங்கராஜனை வைத்து பிரம்மாண்டமாக சீசனை தொடங்கி உள்ளனர்.

இருப்பினும் முதல் வாரமே தயாரிப்பு தரப்புக்கும் கோமாளி நாஞ்சில் விஜயன் தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இரண்டு வார எபிசோடுகள் முடிவடைந்த நிலையில் அன்ஷிதாவுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சக கோமாளிகள் புலம்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் அன்ஷிதா நடித்து வரும் ’செல்லமா’ என்ற சீரியலையும் தயாரித்து வருகிறது என்பதால் தான் அவருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் ’இது எல்லாம் ஸ்கூல் பசங்க சொல்ற புகார் மாதிரி இருக்கிறது என்றும் இதையெல்லாம் நான் கண்டுகொள்ள போவதில்லை’ என்றும் அன்ஷிதா தரப்பு பதில் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement