• Jul 27 2025

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் குழப்பம்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் "வாடிவாசல்" படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது சிம்பு நடிப்பில் அவரது 50 ஆவது படத்தினை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சமீபத்தில் படத்தின் promo வெளியிடுவதாக அறிவித்து இருந்தும் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஒரு கதாபாத்திரம் இன்னும் எடுக்கவில்லை என்பதால் தாமதமாகியது.


இந்த நிலையில் வெற்றிமாறன் தற்போது வரை படத்தின் கதையை திருப்ப மாற்றி எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஒரு குழப்பத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதைவிட படத்தின் promo வீடியோவினை திரையில் வெளியிட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


மேலும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் படக்குழுவினால் அறிவிக்கப்படும். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் நெல்சன் நடிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement