• May 17 2025

சிங்கம் இல்லாமல் ஆரம்பமாகும் "குக்கு வித் கோமாளி" புதிய judgeஐ கலாய்த்த Chef வெங்கடேஷ்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் மூலம், புகழ்பெற்ற ஷெஃப் வெங்கடேஷ் பட், 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியைப் பற்றிய தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துள்ளார். உணவுக்கலை, நகைச்சுவை மற்றும் உணர்வுகளை ஒரு மேடையில் இணைக்கும் வகையில் இந்திய தொலைக்காட்சி உலகத்தில் தனித்த அடையாளம் கொண்ட நிகழ்ச்சியாக 'குக்கு வித் கோமாளி' காணப்பட்டது.


இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய ரீச் பெற்றதற்குக் காரணமாகப் பலர் இருந்தாலும், அதில் முக்கிய பங்கு வகித்தவர் ஷெஃப் வெங்கடேஷ் பட் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சமீபத்திய வீடியோவில், வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சி பற்றி உணர்வு பூர்வமாகக் கூறியுள்ளார். அதன்போது அவர், “நான் குக்குவித் கோமாளியில் ஆரம்ப கட்டத்திலிருந்து நடுவராக இருந்ததாலோ தெரியல, எனக்கு அந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும்." எனக் கூறியிருந்தார்.

நேர்மையான பார்வையுடன் நிகழ்ச்சி பற்றி பகிர்ந்த அவர், தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையிலும் அதன் மூலம் தனக்குக் கிடைத்த நினைவுகள் மற்றும் ரசிகர்களிடம் கிடைத்த அன்பை மிகுந்த நன்றியோடு நினைவு கூர்ந்து வருகின்றார்.


விஜய் டீவியின் குக்கு வித் கோமாளி புதிய சீசனுக்கான புரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் நம்மை ஆச்சரியப்படுத்தும் தகவலாக புதிய நடுவராக Chef கெளஷிக் சேர்ந்துள்ளார். இது குறித்து வெங்கடேஷ் பட் கூறும் போது, “புதிய நடுவர் வரப்போகின்றார். அது ஒரு புது அனுபவமாக இருக்கும். அந்த சீசன் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களோடு நானும் பொறுத்திருந்து பார்ப்பேன்.” என தற்பொழுது பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement