• Aug 28 2025

இந்த குட்டி கிருஷ்ணன் இளைய தளபதினு சொன்ன நம்புவீங்களா? வைரல் போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நாடு முழுவதும் இன்றைய தினம் கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் பலர் தமது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதா வேடமிட்டு அழகு பார்ப்பார்கள்.

இந்த தினத்தில் வீட்டில் விதவிதமான பலகாரங்கள் செய்து கிருஷ்ணரின் பாதத்தை கோலம் இட்டு வழிபாடு செய்ததோடு தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதா போல் அலங்காரம் செய்து பாட்டு பாடி, கோலாட்டம் ஆடி கிருஷ்ணரை மகிழ்விப்பார்கள்.

இதன் காரணமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். திரை பிரபலங்களும் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பார்கள்.


இந்த நிலையில், இளையதளபதி விஜய் கிருஷ்ணர் வேடமிட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

குறித்த போட்டோவில் கையில் புல்லாங்குழலும் நெற்றியில் கிருஷ்ணருக்கு வைக்கப்படும் திலகமும் தலைப்பாகையுடன் குட்டி கிருஷ்ணராக விஜய் கியூட்டாக காணப்படுகின்றார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ஃட்ரெண்டாக்கி தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement