• Apr 28 2025

68 வயதில் இதெல்லாம் தேவையா? ப்ரியாமணியை தகாத முறையில் தொட்ட போனிகபூர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரியாமணியை தகாத முறையில் தொட்டதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து நெட்டிசன்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ப்ரியாமணி, திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ப்ரியாமணி தற்போது பாலிவுட்டில் ’மைதான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் அஜய் தேவ்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து உள்ள நிலையில் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு முந்தைய நிகழ்ச்சி மும்பையில் இன்று நடந்த போது அதில் போனிகபூர், ப்ரியாமணி உள்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் போது ப்ரியாமணியை போனிகபூர் தகாத முறையில் தொட்ட காட்சி இருப்பதையும், ப்ரியாமணி அதை கொஞ்சம் ரசிக்காமல் முகத்தில் கோபத்தை கொட்டிய காட்சிகளும் உள்ளன.

இதனை அடுத்து நெட்டிசன் போனிகபூரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர், போனிகபூருக்கு  68 வயதாகும் நிலையில் இந்த வயதில் அவருக்கு இதெல்லாம் தேவையா என கிழி கிழி என கிழித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement