• Jun 28 2025

’இந்தியன் 2’ டிரைலரில் ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா கமல்? கோர்த்துவிட்ட புளூசட்டை மாறன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் டிரைலர் நேற்றிரவு வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படத்தில் உள்ள காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ’இந்தியன்’ படத்தைவிட தற்போது உள்ள டெக்னாலஜியை வைத்து ஷங்கர் விஷுவல் காட்சிகளில் மிரட்டியுள்ளார் என்றும் ’தசாவதாரம்’ படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் பல கெட்டப்புகளில் தோன்றும் படமாக ’இந்தியன் 2’ படம் இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’சிஸ்டம் சரியில்லை என்று வாய் கிழிய பேசுவோம், ஆனால் அதை தடுக்க ஒரு துரும்பை கூட கிள்ளி போடறது இல்ல’ என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தை குறிப்பிட்டுள்ள புளூசட்டை மாறன் ’தலைவர் தாக்கப்பட்டார்’ என்று ரஜினியை விமர்சனம் செய்துள்ளார்.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதாக கூறிய போது ’சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.  அதன் பின்னர் சில காரணங்களால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததைத்தான் புளூசட்டை மாறன் சுட்டிக்காட்டி இந்த பதிவை செய்துள்ளதாக கூற, இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கும் கமெண்ட்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஊழலை ஒழிப்பேன் என்று அரசியலுக்கு வந்த கமல், ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துள்ளார் போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.  மொத்தத்தில் கமல்  - ரஜினி இடையே இருக்கும் நல்ல நட்பில் விரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு புளூசட்டை மாறன் ஒரு பதிவை செய்து உள்ளார் என்று என்றும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement